கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்

திரிஷாவின் தி ரோட், விஜய் ஆண்டனியின் ரத்தம், விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று, மதுர் மிட்டலின் 800, அருணாசலம் வைத்தியநாதனின் சாட் பூட் த்ரீ, வனிதா விஜயகுமாரின் தில்லு இருந்தா போராடு, ஆடுகளம் நரேனின் இந்த க்ரைம் தப்பில்ல, எனக்கு என்டே கிடையாது மற்றும் என் இனிய தனிமையே ஆகிய 9 தமிழ் திரைப்படங்கள் நாளை ஒரே நாளில் வெளியாகின்றன.

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மை பாத்திரத்திலும் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள திரைப்படம் தி ரோட். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இத்திரைப்படம் நாளை வெளியாகிறது. 

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படமும் நாளை வெளியாகிறது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்டோர் நடித்துள்ள இறுகப்பற்று திரைப்படம் நாளை வெளியாகிறது. எலி படத்தை இயக்கிய, யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி உள்ள ‘800’ படமும் நாளை வெளியாக உள்ளது. இதில் 
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடித்து இருக்கிறார். 

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்

இதுதவிர, அருணாசலம் வைத்தியநாதனின் 'சாட் பூட் த்ரீ', வனிதா விஜயகுமாரின் 'தில்லு இருந்தா போராடு', ஆடுகளம் நரேனின் 'இந்த க்ரைம் தப்பில்ல', 'எனக்கு என்டே கிடையாது' மற்றும் 'என் இனிய தனிமையே' ஆகிய திரைப்படங்களும் நாளை வெளியாகின்றன

Share this story