கோவாவில் 90ஸ் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து பார்ட்டி!
சென்னையில் பார்ட்டி என்றாலே சினிமா பிரபலங்கள் தெறித்து ஓடி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், 90ஸ் பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக கிளம்பி கோவாவுக்குச் சென்று பார்ட்டி பண்ணியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. எல்லாருமே மிஸ்டர் ஒயிட் விளம்பரம் போல வெள்ளை நிற உடைகளில் சொகுசு படகில் கொடுத்துள்ள போஸை பார்த்தாலே ரசிகர்கள் செம ஹாப்பி ஆகிவிடுவார்கள். அந்தளவுக்கு மொத்த ரெட்ரோ நினைவுகளையும் இந்த போட்டோக்கள் தாங்கி நிற்கின்றன.
இந்த கால சினிமா பிரபலங்கள் போல 90ஸ் காலத்தில் படங்களை எடுத்த நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும் ஈகோ எல்லாம் அதிகம் பார்க்காமல், எல்லாருமே ஒரே குடும்பமாக பணியாற்றிய நிலையில் தான் அடிக்கடி இப்படி ரீ யூனியன் எல்லாம் செய்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்து வருகின்றனர். நண்பர்களுடன் கோவாவுக்கு டூர் போட்டாலே கடைசி வரை பிளான் வேலைக்காகாது என்று ஏகப்பட்ட மீம்கள் வைரலாகி வரும் நிலையில், பக்காவாக பிளான் போட்டு ஒட்டுமொத்த பிரபலங்களும் கோவாவுக்கு சென்றுள்ளனர்.
மீனா, சிம்ரன் எல்லாம் போட்டிப் போட்டு நடித்த நிலையிலும், நல்ல தோழிகளாக வலம் வருகின்றனர். டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பிறகு சிம்ரன் தனது நண்பர்களுடன் நல்ல டூர் அடித்து வருகிறார். கருத்தம்மா, நேசம், உல்லாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மகேஸ்வரியை நினைவு இருக்கா? அவரும் மீனா மற்றும் சிம்ரனுடன் கோவா டூரில் பங்கேற்றுள்ளார். 2000ம் ஆண்டுக்குப் பிறகு 25 ஆண்டுகளாக சினிமாவில் அவர் நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மாளவிகா, சங்கீதா உள்ளிட்டோரும் இந்த ரீ யூனியன் டூரில் ஐக்கியமாகி உள்ளனர்.
இதில், ஆச்சர்யமளிக்கும் விஷயம் என்றால் பிரபுதேவா, ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், லிங்குசாமி மற்றும் நம்ம ரவி மோகன் அண்ணா இயக்குநர் மோகன் ராஜாவும் கோவா டூரில் நடிகைகளுடன் இணைந்து சென்றிருப்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

