96 படத்தின் 2ஆம் பாகம் விரைவில்... அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார்..!

prem

காதல் காவியமாக ரசிகர்கள் கொண்டாடும் 96 படத்தின் 2ஆம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். 

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான படம் ‛96'. அதன் பிறகு இப்படத்தை 2020ம் ஆண்டில் ‛ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த பிரேம்குமார், அந்த படத்தில் சர்வானந்த், சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் ‛மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார்.96

அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகிறார் பிரேம்குமார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கூறும்போது, இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதையை அவர்கள் இருவரிடத்திலும் சொன்ன போது ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டார்கள். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பிரேம்குமார்  தெரிவித்துள்ளார் 

Share this story

News Hub