காதலர் தினத்தையொட்டி மீண்டும் வெளியாகும் 96 திரைப்படம்
1707720353438
2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிட்டியது. பிரேம்குமார் இயக்கிய இப்படம், பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். மேலும், காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’படத்தின் ராம், ஜானு கதாப்பாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், காதலர் தினத்தன்று 96 திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.