காந்தாரா வெற்றி - ரிஷப் ஷெட்டிக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு

Kanthara

காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கு பாலிவுட் இயக்குனர்களிடம் இருந்தும் நடிப்பதற்கான அழைப்புகள் வந்ததாக நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். 

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான உள்ள நிலப் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப். படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படம் என்ற பெருமையை காந்தாரா பெற்று உள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், காந்தாரா பட வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து எனக்கு பாலிவுட் இயக்குனர்களிடம் இருந்தும் நடிப்பதற்கான அழைப்புகள் வந்தன. எனக்கு உண்மையில் நடிகர் அமிதாப் பச்சனை அதிகம் பிடிக்கும். நடிகர்கள் ஷாகித் கபூர் அல்லது சல்மான் பாய் மற்றும் பலர் என ஒவ்வொருவரையும் நான் ரசிக்கிறேன். எனினும், தற்போது கன்னட திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
 

Share this story