விஷாலுடன் காதல் திருமணமா?? - நடிகை அபிநயா விளக்கம்..

விஷாலுடன் காதல் திருமணமா?? -நடிகை அபிநயா விளக்கம்

விஷாலுடன்  காதல்  திருமணம் குறித்த தகவலுக்கு நடிகை அபிநயா விளக்கம் கொடுத்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக மீண்டும் பொறுபெற்றுள்ள அவர், வினோத் குமார் இயக்கத்தில் ‘லத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து தற்போது  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் சூழலில்,  விஷாலும் நடிகை அபிநயாவும் காதலித்து வருவதாக  சமூக வலைதளங்களில்  தகவல் வெளியானது.

விஷாலுடன் காதல் திருமணமா?? - நடிகை அபிநயா விளக்கம்..

அபிநயா,  சசிகுமாரின் ‘நாடோடிகள்’படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். வாய் பேச முடியாத இவர் தொடர்ந்து  ஈசன், பூஜை உள்ளிட்ட  படங்களில் நடித்து வருகிறார்.  அந்தவகையில்  அபிநயா விஷாலுடன் ‘பூஜை’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 45 வயதாகிவிட்ட நிலையில் விஷால் குறித்து அவ்வப்போது திருமணம் தகவல்கள்  வெளியாவது வழக்கம்.. அந்தவகையில்  நடிகை அபிநயாவுடன் காதல் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

விஷாலுடன் காதல் திருமணமா?? - நடிகை அபிநயா விளக்கம்..

தற்போது, இது குறித்து நடிகை அபிநயா விளக்கமளித்துள்ளார்.  அதில், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நான் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன். அதற்காக எடுக்கப்பட்ட  போட்டோஷூட்  புகைப்படங்களை யாரோ வெளியிட்டுள்ளனர் என்றும்,  அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்றார்.  நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பப்பட்டு வருகிறது என்றும்,  இத்தகவல் முழுக்க முழுக்க பொய் என்று என்றும் நடிகை அபிநயா கூறியுள்ளார்.

Share this story