ஹெய்ஸ்ட் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘ஆதாரம்’... டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி !

AADHARAM

ஹெய்ஸ்ட் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ஆதாரம்’ படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’. இந்த படத்தில் அஜித் விக்னேஷ் கதாநாயகனாகவும், பூஜா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராதாரவி, ஓய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

AADHARAM

 நகை கடை கொள்ளை ஒன்றின் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் பாணியில் ஹெய்ஸ்ட் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

AADHARAM

மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பி.எஸ்.மித்ரன், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இணைந்து இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல் கமர்ஷியல் இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 AADHARAM
 

Share this story