'அஜித்'தை எதிர்க்கும் 'அரவிந்த் சாமி' – வெளியான AK62 படத்தின் அப்டேட்.

photo

லைக்க நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62ஆவது படமாக தயாராகவுள்ள படத்தில் யார் வில்லன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

1994-ல்பாசமலர்கள்’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்து அசத்திய அஜித் ,அரவிந்த் சாமி கூட்டணி தற்போது 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையவுள்ளனர். இந்த கூட்டணியில் இசையமைப்பாளர் அனிரூத்தும் இணைந்துள்ளார். வழக்கமாக நெகட்டிவ் கதாபாத்திரம் கொடுத்தால் தூக்கிசாப்பிடும்  அரவிந்த் சாமி  இந்த படத்திலும் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

photo

தற்போது படத்தின் ப்ரீ புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இம்மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றுதான் படத்தில் சந்தானம் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது அரவிந்த் சாமியும் இந்த காம்போவில் இணைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this story