‘அநீதி’ பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

Aneethi's first single

‘அநீதி’ படத்தின் பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் திரைப்படம் ‘அநீதி’. வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து ‘Urban Boyz‘ என்ற நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Aneethi's first single

இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா. காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் இருக்கும் இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலை பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலை வெளியிடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story