ஏ.எல்.விஜய் - அருண் விஜய் கூட்டணியில் ‘அச்சம் என்பது இல்லையே’... ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு !

AchchamEnbathuIllaye

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மதராசப்பட்டிணம், தெய்வ திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கடைசியாக ஏ.எல்.விஜய் இயக்கிய திரைப்படம் ‘தலைவி’. இந்த படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

AchchamEnbathuIllaye

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் லண்டனில் தொடங்கி நடைபெற்றது. 

AchchamEnbathuIllaye

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.. இந்த படப்பிடிப்பிற்காக 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. லண்டன் சிறையில் நடப்பது போன்று கதைக்களத்தை எடுக்க இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது- 

Share this story