தொடரும் பைக் பயணங்கள்... நடிகர் அஜித்தின் அசத்தலான புகைப்படங்கள்

Ajith

நடிகர் அஜித் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகர்களில் அஜித்துக்கு முக்கிய இடம் உண்டு. அவர் செயல்பாடு எப்போது மற்ற நடிகர்களை விட வித்தியாசமாக இருக்கும். திரைப்படங்களில் பிசியாக நடித்தாலும், அவ்வெவ்போது தனக்கு பிடித்த மாதிரி இருப்பது அஜித்தின் வழக்கமான ஒன்று. பைக், கார் பிரியரான இவர், திரைப்பட படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். அஜித் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

ajith

இந்நிலையில், தற்போது இவர் புனேவிற்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அஜித்தின் 'துணிவு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story