ஒருதலை காதல் கந்தன்....’வாத்தி’ஃப்ர்ஸ்ட் சிங்கிள்....நடிகர் தனுஷ் வெளியிட்ட வீடியோ

vathi

வாத்தி திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அந்த பாடலை நடிகர் தனுஷ் பாட அதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை தோழி பிரேமா', முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இதனையொட்டி நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒருதலை காதல் கந்தன், இந்த தருதலை மனுசுக்குள் வந்த என்று தொடங்கும் அந்த பாடலுக்கு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Share this story