ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘கள்வன்’ படத்தின் டீசர் வெளியீடு.

photo

ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடித்து பிவி சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள  திரைப்படம் ‘கள்வன்’ ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. தில்லி பாபு இந்த படத்தை தயாரித்துள்ளார். பிவி சங்கர் 'கள்வன்' படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.  ஜிவி. பிரகாஷ்ஷிற்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

photo

 'கள்வன்' படத்தில் இவர்களளோடு இணைந்து  தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி அட்வென்சர் படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிந்து போஸ்ட புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது.

photo

  பிவி சங்கருடன் இணைந்து ரமேஷ் அய்யப்பன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து படத்திற்கான வசனத்தையும் எழுதியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது, இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டீசரில் படம் காடு சார்ந்து வாழும் மலைகிராம மக்கள், காட்டுயானை, மயானகொள்ளை, என  ஆக்க்ஷன் திரில்லரில் உருவாகியுள்ளது, இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. ஜி வி பிரகாஷ், தீனா, பாரதிராஜா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர்.

 

Share this story