நடிகர் ஜெய்க்கு விரைவில் திருமணம். அப்போ அந்த இரு நடிகைகளின் நிலைமை ?
நடிகர் ஜெய்க்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து நடித்து வருகிறார் நடிகர் ஜெய். பன்முக திறமைக் கொண்ட அவர், இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்று சினிமாவில் நுழைந்தார். ஆனால் தற்போது இளம் நடிகராக நடிகர் ஜெய் ஜொலித்து வருகிறார்.

பகவதி படத்தில் நடிகரான அறிமுகமான ஜெய், சுப்ரமணியபுரம், சரோஜா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு சென்னை - 28, எங்கேயும் எப்போதும், ராஜாராணி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில் விரைவில் நடிகர் ஜெய் திருமணம் செய்யவுள்ளராம். இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது திருமணத்தையொட்டி சென்னை - 28 படக்குழுவினருக்கு பேச்சிலர் பார்ட்டி ஒன்றையும் ஜெய் வைத்துள்ளாராம். இதற்கிடையே எங்கேயும் எப்போதும் படத்தின் போது அஞ்சலியுடன் நடிகர் ஜெய் மிகவும் நெருக்கமாக இருந்தார். அதேபோன்று வெப் தொடர் ஒன்றில் நடிக்கும்போது வாணிபோஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

