குருவிடம் ஆசிபெற்ற நடிகர் கமலஹாசன்.. வைரலாகும் புகைப்படம் !

kamal

 மூத்த இயக்குனர் கே விஸ்வநாத் நடிகர் கமலஹாசன் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் மூத்த இயக்குனராக இருப்பவர் கே விஸ்வநாத். சங்கராபரணம் உள்ளிட்ட பல சூப்பர் திரைப்படங்களை இயக்கியவர். இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவை. இன்றைக்கு கொண்டாடப்படும் இயக்குனராக விஸ்வநாத் இருக்கிறார். 

kamal

தமிழில் மாபெரும் வெற்றிப்பெற்ற ‘சலங்கை ஒலி’ படத்தை ‘சாகர சங்கமம்’ என்ற பெயரில் கமலை வைத்து இயக்கினார். அதன்பிறகு குருதிபுனல், உத்தம வில்லன், முகவரி, யாராடி நீ மோகினி, ராஜபாட்டை, லிங்கா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

வயது முதிர்வு காரணமாக  தற்போது ஐதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் விஸ்வநாத்தை மரியாதை நிமித்தமாக நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்தார். அப்போது ஆசி வாங்கிய அவர், சில மணி நேரங்களில் பேசினார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

Share this story