ஸ்பெயின் நாட்டில் ஸ்டைலான லுக்கில் நடிகர் கார்த்தி... வைரலாகும் புகைப்படங்கள் !

karthi

ஸ்பெயின் நாட்டிற்கு நடிகர் கார்த்தி சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

karthi

தமிழ் சினிமாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகரான இருப்பவர் கார்த்தி. அவர் நடிப்பில் கடைசியான வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று அவருக்கு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. 

karthi

இதையடுத்து தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.  ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

karthi

தற்போது சிறிய இடைவேளை இருக்கும் நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு நடிகர் கார்த்தி சென்றுள்ளார். அங்கு ஸ்டைலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story