நடிகர் கிருஷ்ணா மறைவு... மகேஷ் பாபுவுக்கு ஆறுதல் சொன்ன சரத்குமார் !

sarathkumar

 பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் உடலுக்கு நடிகர் சரத்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் கிருஷ்ணா. 79 வயதாகும் அவர், பன்முக திறமைக் கொண்டவர். பிலபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான அவர், ஐந்து தசாப்தங்களாக திரை துறையில் ஜொலித்து வந்தார். சுமார் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

sarathkumar

வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு நேற்று உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இது சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

sarathkumar

கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே ரஜினி, கமல், நாசர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன் நேரில் சென்று நடிகர் கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் கிருஷ்ணாவின் மறைவால் வாடும் உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

 

Share this story