மருத்துவமனையில் நடிகர் மனோபாலா... என்னாச்சு என விசாரிக்கும் ரசிகர்கள் !

manobala

 நடிகர் மனோபாலா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் மனோபாலா. நீண்ட சினிமாவில் பணியாற்றி வரும் அவர், உதவி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சூப்பர் ஹிட் சில படங்களை இயக்கி வருகிறார். பன்முக திறமை கொண்ட அவர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என முப்பரிமாணங்களில் பணியாற்றி வருகிறார். 

manobala

தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் கவரும் வகையில் காமெடி கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

manobala

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனோபாலாவை, நடிகர் சங்க நிர்வாகி பூச்சி முருகன் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் மனோபாலாவிற்கு என்னவாயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Share this story