ஆஸ்கர் நாயகனை சந்தித்த நடிகர் நெப்போலியன்.. நெகிழ்ச்சி பதிவு !

Nepoleon Duraisamy

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை நடிகர் நெப்போலியன் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நெப்போலியன். 90-களில் பிரபலமான இவர், ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த ‘சீவலப்பெரி பாண்டி’ உள்ளிட்ட படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது.  ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘எஜமான்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார்.

Nepoleon Duraisamy

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதன்பிறகு அரசியலில் இருந்து வந்த அவர், அதன்பிறகு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு குடும்பத்துடன் இருக்கும் அவ்வெவ்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

Nepoleon Duraisamy

இந்நிலையில் அமெரிக்கா வந்துள்ள ஏ.ஆர்.ரகுமானை, மரியாதை நிமித்தமாக நெப்போலியன் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நெப்போலியன் வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..! அதே அன்பான உபசரிப்பு…! என்று தெரிவித்துள்ளார். 


 

Share this story