‘லவ் டுடே’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்.. இயக்குனரை அழைத்து நேரில் பாராட்டு !

love today

‘லவ் டுடே’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை அழைத்து பாராட்டியுள்ளார். 

‘கோமாளி’ படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் ‘லவ் டுடே’.  2k கிட்ஸ்களின் சமகால காதல் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 4-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 4 கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

love today

இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ள பதிவில், இதுக்கு மேல் நான் என்ன கேட்க முடியும். சூரியனுக்கு அருகில் இருந்தது போல் இருந்தது. அவரின் அருகில் இருந்தபோது அவ்வளவு சூடு, இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, நடை மற்றும் அன்பு  ஆகியவை இருந்தது. இவ்வளவு பெரிய ஆளுமை எனக்கு வாழ்த்து சொன்னார். இதை என்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


 

Share this story