மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது... கர்நாடக முதல்வருடன் இணைந்து வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த் !

Puneeth Rajkumar

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். 

கன்னட சினிமாவில் முடிசூடா மன்னனாக இருந்தவர் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார், அப்பு என்று அழைக்கப்பட்ட அவர், பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனாவார். 46 வயதே ஆகும் அவர், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். 

PuneethRajkumar

அவரின் உயிரிழப்பு இந்திய சினிமாவில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பிறகும், நினைவிடத்தில் ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை கௌவிக்கும் விதமாக கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ஆம் தேதி மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

PuneethRajkumar

இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது சார்பில் புனித்தின் மனைவி அஸ்வினியிடம் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் வழங்கினர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். 

 

Share this story