அரசியலில் நுழைய தயாரான 'விஷால்' – தமிழக முதல்வரின் படத்தை டாட்டூ போட்டு அசத்தல்.

photo

நடிகர் விஷால் அரசியலிற்கு வருவாரா? மாட்டாரா? என பல கேள்விகள் உலாவரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

photo

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாக திரைப்படம் ‘லத்தி’. கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  விஷால்லிற்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்த படத்தில் அசத்தலான நடிப்பை விஷால் வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் இவர் தற்போது ‘மார்க் ஆண்டனி’ படத்தில், ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வந்தாலும் , ஒரு பக்கம் அரசியலிலும் ஒரு கண் வைத்துள்ளார். அதற்கு உதாரணமாக ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட விருப்ப மனு கொடுத்து, அம்மனு நிராகரிக்கப்பட்டதும்  குரிப்பிடத்தக்கது.

photo

இந்த நிலையில் இன்று விஷாலின் பிகைப்படம் ஒன்று வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் விஷால் அனது மார்பு பகுதியில் மறைந்த தமிழக முதல்வரான, நடிகர் திலகம் எம்.ஜி.ஆர்  படத்தை பச்சை குத்தியுள்ளார். இது உண்மையான பச்சையா, இல்லை படத்திற்காக இது போன்று செய்துள்ளாரா? அதுவும் இல்லாமல் அரசியலில், அந்த பெரிய கட்சிக்கு ஆதராவாக களமிறங்க போகிறாரா? என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

photo

Share this story