முழுமையான அரசியலில் ஈடுபட போகிறேன் - நடிகை நமீதா பேட்டி

namitha

வரும் காலத்தில் முழுமையான அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார். 

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை நமீதா. தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற நமீதா, இதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.  பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். இவருக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 

இந்நிலையில், நடிகை நமீதா தனது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நமீதா, தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும் வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். நடிகை நமீதா பா.ஜ.க.வில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story