நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாள்... புதிய படங்களின் போஸ்டர்கள் வெளியீடு !

aiswarya rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்துள்ள திரைப்படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்காமுட்டை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். அதன்பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் அவர், தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். 

aiswarya rajesh

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பனசுந்தரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். 

aiswarya rajesh

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து வரும் அவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்கள் சொப்பனசுந்தரி மற்றும் ரன் பேபி ரன். இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளையொட்டி இப்படங்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story