ரஜினிகாந்துடன் நடிகை குஷ்பூ திடீர் சந்திப்பு..

 ரஜினிகாந்துடன்  நடிகை குஷ்பூ திடீர் சந்திப்பு..


சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் வைத்து, நடிகை குஷ்பூ திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக  இருப்பவர் ரஜினிகாந்த்.  70 வயதிலும் ஆக்டிவாக இருந்து வரும் ரஜினியின் நடிப்பில் கடைசியாக  வெளியான திரைப்படம்  அண்ணாத்த. இந்தப்படத்திற்குப் பிறகு தற்போது  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  உருவாகிவரும்  ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் .  
  ரஜினிகாந்துடன்  நடிகை குஷ்பூ திடீர் சந்திப்பு..
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் ரஜினி  நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், மற்றொருபடத்தை ரஜியின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கும் பிரபலங்கள் அதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவிப்பது வழக்கம்..  

 ரஜினிகாந்துடன்  நடிகை குஷ்பூ திடீர் சந்திப்பு..

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தை,  நடிகை குஷ்பூ திடீரென அவர் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.  ரயினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர்,  வழக்கமான சந்திப்பு தான் என்றும் கூறியுள்ளார். அவர், “ ஒரு  கப் டீ மற்றும்  நிறைய சிரிப்புகளுடன்  , ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாருடன் ஒரு கேஷுவல் சந்திப்பு..  மிகுந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தருகிறது..  உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு மிக்க நன்றி சார்.  உங்களின் மதிப்புமிக்க நபராக இருப்பதில் எப்போதும் மகிழ்ச்சி.. மச் லவ்” என்று குறிப்பிட்டுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த்தும், குஷ்பூவும்  இணைந்து அண்ணாமலை, மன்னன், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

Share this story