‘மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாளி கட்டுவாராம்’.. தன்னை பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி - நடிகை பிரியா பவானி சங்கர் !

priya bhavani shankar

 தன்னை பற்றிய பரவிய செய்திக்கு நடிகை பிரியா பவானி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியல் மூலம் பிரபலமானவர். அதன்பிறகு வைபவ் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நடித்தார்.

priya bhavani shankar

இதையடுத்து 'குருதியாட்டம்', பொம்மை, 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', ‘யானை’ 'இந்தியன் 2 ' , '10 தல'  என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே நடிகை பிரியா பவானி சங்கர் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில் தமிழில் நடிக்க வந்தபோது என்னுடைய எதிர்காலம் குறித்து எந்த திட்டமும் இல்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா, இல்லையா என்றெல்லாம் கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதனால் நடிக்க வந்தேன் என்று கூறியதாக தகவல் பரவியது. 

இந்நிலையில் இந்த செய்திக்கு குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், நான் சொன்னதாக பரவும் செய்திகள் பொய்யானவை. அப்படியே நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது. எல்லாமே பணத்திற்காக தானே நடிக்கிறார்கள். நானும் அதற்காக நடிப்பதில் தவறு ஏதும் இல்லை. என்னுடைய வாழ்க்கையில் யாரும் தலையிட நான் விரும்பமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். 


 

Share this story