இனி தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவுள்ளேன் - ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகை பிரியாமணி !

dr56

10 வருடங்களுக்கு பிறகு நான் நடித்துள்ள திரைப்படம் ‘Dr 56’ என்று நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். 

ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dr 56’.  க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

dr56

வரும் டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய பிரியாமணி, ‘சாருலதா’ படத்திற்கு பிறகு Dr 56’ திரைப்படம் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. நான் எதிர்பார்த்தப்படியே இப்படம் நன்றாக வந்துள்ளது. 

இது மருத்துவ மாஃபியா கும்பலை பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் மாறுப்பட்ட சண்டை காட்சி ஒன்றிலும் நடித்துள்ளேன். பத்து வரும் கழித்து நான் நடித்து வெளி வரும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழில் தொடர்ந்து நடிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார். 

 

 

Share this story