அடகொடுமையே... விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் கார்... ஐசியுவில் மகள்..

rambha

கார் விபத்தில் சிக்கி நடிகை ரம்பா படுகாயம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

rambha

தமிழ் திரையுலகில் 90-களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா.  ரசிகர்களால் தொடை அழகி என அழைக்கப்பட்ட நடிகை ரம்பா, கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை கவர்ந்திழுத்தவர்.தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

rambha

சினிமாவிற்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

rambha

தற்போது லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் ரம்பா, பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரும்போது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் ரம்பா மற்றும் இரண்டு குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பிக்கொண்ட நிலையில் இரண்டாவது மகள் சாஷா மட்டும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். ஐசியூவில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த  தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரம்பா வெளியிட்டுள்ளார்.  இதை பார்த்த திரைப்பிரபலங்களான சினேகா, மீனா உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வருகின்றனர். 

 


 

Share this story