‘கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்’ - நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட நடிகை ஜோதிகா !

sri

கனத்த இதயத்துடன் ‘ஸ்ரீ’ படத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.  

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டு நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்துள்ள அவர் இந்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார். 

jothika

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஸ்ரீ’ என்ற பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பரிவன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 

jothika

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பு நடிகை ஜோதிகா, நேற்றுடன் நிறைவு செய்தார். இது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கனத்த இதயத்துடன் ஸ்ரீ படத்தின் எனது பகுதி படப்பிடிப்பை முடித்து விடைபெறுகிறேன். இந்த படக்குழுவினருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான தருணம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த துஷார் அவர்களுக்கு நன்றி. அதேபோன்று நடிகர் ராஜ்குமார் ராவின் மிகப்பெரிய ரசிகை நான். பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படக்குழுவினருடன் பணியாற்றும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார். 

 

 

Share this story