விபத்திற்கு பின் ரம்பா வெளியிட்ட புகைப்படம்.. நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள் !

ramba

 சமீபத்தில் விபத்தில் சிக்கிய ரம்பா, தனது குடும்பத்துடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ramba

தமிழ் சினிமாவில் கிளாமராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். 

ramba

பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து கடந்த கடந்த 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ramba

தற்போது லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் ரம்பா, பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரும்போது சிறிய விபத்தில் சிக்கியுள்ளார்.  இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரம்பா வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ரம்பா எப்போதும் நலமுடன இருக்கவேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ramba

Share this story