டிடக்டிவ்-ஆக கலக்கும் சந்தானம்.. ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ டிரெய்லர் வெளியீடு !

தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகியுள்ளது. ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்று பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ‘வஞ்சகர்’ உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, முனீஷ்காந்த், புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லாப்ரின்த் பிலிம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.