பிரபல நடிகரை காதலிக்கிறேனா ?... ஐஸ்வர்ய லஷ்மி வெளியிட்ட க்யூட் பதிவு !

AishwaryaLekshmi

 பிரபல நடிகரை காதலிப்பதாக வந்த தகவலுக்கு நடிகை ஐஸ்வர்ய லஷ்மி விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்ய லஷ்மி. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்த அவர், தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதன்பிறகு மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றார். சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 

AishwaryaLekshmi

இதற்கிடையே கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அர்ஜூன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து புதிய ஜோடி திரையுலகில் மலர்ந்துவிட்டதாக கூறி, அவர்களுக்கு காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 

AishwaryaLekshmi

உண்மையிலேயே அர்ஜூன் தாஸை, ஐஸ்வர்ய லஷ்மி காதலிக்கிறாரா என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கு அவர் அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ரசிகர்களுக்கு வணக்கம். கடைசியாக நான் பகிர்ந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும். நாங்கள் இருவரும் நண்பர்கள். தற்செயலாக அந்த புகைப்படத்தை வெளியிட்டேன். அது இந்த அளவிற்கு கீழ்த்தரமாக போகும் என எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்து அர்ஜூன் தாஸ் ரசிகர்கள் மேசேஜ் அனுப்பி வருகின்றனர். உங்கள் மீது உறுதியாக இருங்கள் என்று கூறியுள்ளார்.   
 

Share this story