ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

the great indian kitchen

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.

the great indian kitchen

சமையலறையில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்க்கை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

the great indian kitchen

ரிலீசுக்கு தயாரான இப்படம் கடந்த டிசம்பர் 29-ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Share this story