‘டிரைவர் ஜமுனா’ வெற்றி... கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ் !

driver jamuna

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் வெற்றியை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேக் வெட்டி கொண்டாடினார். 

driver jamuna

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த படத்தை ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கியுள்ளார்.

driver jamuna

இந்த படத்தில் கால்டாக்சி ஓட்டுனராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஒரு பெண் கால்டாக்சி ஓட்டுனராக இருந்தால் அவருக்கு என்ன மாதிரி பிரச்சனை ஏற்படும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

driver jamuna

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படக்குழுவினர் இன்று கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்தது.  கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story