“கடவுள் பாகுபாடு பார்ப்பதில்லை!” – சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் கருத்து.

photo

கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் படங்களை அதிகமாக தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் இதே பெயரில் வெளியாகி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் செயதியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

photo

ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிடம் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர்” கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான்; ஆண் பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்த கடவுளும் என் கோவிளுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை; அப்படி எந்தக் கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள்… எந்தக் கடவுளும் இது பண்ணக்கூடாது, இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை; எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இதுபோன்ற கட்டுபாடுகளை ஒரு போதும் நம்புவதில்லை.” என தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளார்.

photo

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

photo

 

Share this story