கால்டாக்சி டிரைவராக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்... 'டிரைவர் ஜமுனா' படத்தின் முக்கிய அப்டேட் !
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் டஜன் கணக்கில் திரைப்படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’.

இந்த படத்தை ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுனராக நடித்துள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5.15 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

