அப்பாவை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... புதிய படம் தொடங்குவது எப்போது ?

rajini

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு கருத்து வேறுபாடு அவரை பிரிந்தார். இதனால் சமீபகாலமாக சினிமா படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

rajini

அந்த வகையில் ஏற்கனவே  தனுஷ் நடிப்பில் வெளியான '3' மற்றும் வை ராஜா வை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகின. அதன்பிறகு பாலிவுட் படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

rajini rajini

இதற்கிடையே லைக்கா சார்பில் இரண்டு படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாகவும், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளனர். ரஜினியின் இந்த கதாபாத்திரம் படத்தில் 20 நிமிடங்கள் இருக்கும் என தகவல் கசிந்துள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story