ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஹீரோ இவர்தான்.. படத்தின் தலைப்பு குறித்து முக்கிய அப்டேட்

aiswarya rajini

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் ஹீரோ குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, சினிமா படம் ஒன்றை இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான '3' மற்றும் வை ராஜா வை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

aiswarya rajini

இதையடுத்து லைக்கா தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு ‘லால் சலாம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாளை இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் துவங்குகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், லைக்கா சார்பில் சுபாஷ்கரண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

aiswarya rajini

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் 20 நிமிடம் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோன்று இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் விஷ்ணு விஷால் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதுதவிர நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடிப்பார் என கூறப்படுகிறது. 

 

 

Share this story