தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ttn

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் நடிகர்கள்  ரம்யா கிருஷ்ணன்,  வசந்த் ரவி, யோகி பாபு மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்த வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் கேஷுவலாக அமர்ந்து கொண்டு தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ள அவர் , தேவையான , தவறு இல்லாத,  குறையற்ற அன்பு தந்தை என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தந்தை மற்றும் தனது மகன் வீர் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை சௌந்தர்யா பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share this story