பூஜையுடன் தொடங்கியது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’.. வைரலாகும் ஃபோட்டோஸ்..

 பூஜையுடன் தொடங்கியது  ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 3-வது படமான  லால் சலாம்  பூஜையுடன் துவங்கியது.

 பூஜையுடன் தொடங்கியது  ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’.. வைரலாகும் ஃபோட்டோஸ்..

கடந்த 2012ல் வெளியான ‘3’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அடுத்ததாக கௌதம் கார்த்தி நடிப்பில் ‘வை ராஜாவை’ என்கிற படத்தை இயக்கினார்.   இதனையடுத்து அவர் மூன்றாவதாக, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்  தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். 

lal Salaam

இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.  ' லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

 பூஜையுடன் தொடங்கியது  ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’.. வைரலாகும் ஃபோட்டோஸ்..

ஏ. ஆர். ரஹ்மான்  இசையைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர்.

 lal Salaam

தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன்  கவனிக்க,  நிர்வாக தயாரிப்பாளர் பணிகளை என். சுப்ரமணியன் செய்கிறார்.  இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

lal Salaam

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பூஜை இன்று நடைபெற்றது.   இதில் லைகா நிறுவனம் சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஐஸ்வர்யா ராஜேஷ்,  நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

lal salaam

அந்தப் புகைப்படங்களை லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. ‘லால் சலாம்’ பட பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

Share this story