அஜித்துடன் இணையும் ‘மாஸ்டர்’ வில்லன்.. வேற லெவலில் ‘ஏகே 62’

ajith 62

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தில் மாஸ்டர் பட வில்லன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். 

ajith 62

 முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சந்தானம் மற்றும் அரவிந்த சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

ajith 62

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘கைதி’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியிருந்தார். இதையடுத்து விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் இரண்டாவது வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story