அஜித்தின் 'துணிவு' படத்தை கைப்பற்றிய லைகா... அசத்தல் அறிவிப்பு !

thunivu

 அஜித்தின் 'துணிவு' படத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'துணிவு'. அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். அதில் ஒன்று ஹீரோவாகவும் மற்றொன்று வில்லன் கதாபத்திரமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

thunivu

 இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாக உள்ளது. 

thunivu

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இதையொட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்டுள்ளது. 

Share this story