பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் ‘துணிவு’... உறுதிப்படுத்திய இயக்குனர் !

thunivu

அஜித்தின் ‘துணிவு’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதை இயக்குனர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார். 

எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்தின் 61வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. 

thunivu

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

thunivu

அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்பதை இயக்குனர் எச் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வினோத் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


 

Share this story