'துணிவு' யுஎஸ்ஏ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்... எகிறும் எதிர்பார்ப்பு !

thunivu

அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தின் அமெரிக்க  உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட இரண்டு தோற்றத்தில் அஜித் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

thunivu

இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளது. விரைவில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க உரிமையை லைக்கா நிறுவனம் மற்றும் டென்டு கொட்டாய் ஆகிய இரு நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. 

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்‌. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story