மருதநாயகத்தை இயக்குகிறாரா அல்போன்ஸ் புத்திரன்... கமலுடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு !

kamal

உலகநாயகன் கமலஹாசனை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சந்தித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன். ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு ‘பிரேமம்’ படத்தை இயக்கி தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துவிட்டார். வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவான அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

alphonse puthren

இதையடுத்து சில ஆண்டுகள் கழித்து பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘கோல்டு’ படத்தை இயக்கியுள்ளார். மூன்று திரைப்படங்களே இயக்கியுள்ள அவருக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. அதனால் அவர் அடுத்த எந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

alphonse puthren

இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் புத்திரன், திடீரென அவரை சந்தித்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்புறம் மருதநாயகம் போஸ்டர் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் மருதநாயம் மீண்டும் உருவாகிறதா என்றும், அதை இயக்குவது அல்போன்ஸ் புத்திரனா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

alphonse puthren

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சினிமாவின் இமயமலை கமல் சாரை என் வாழ்வில் முதல் முறையாக சந்தித்தேன். அவரிடம் அசீர்வாதம் பெற்றேன். அதன்பிறகு அவர் சொன்ன 5,6 சின்ன கதையை என் டைரியில் எழுதிக்கொண்டேன். ஒரு ஆசிரியராக அவர் சொன்ன விஷயங்களை ஒரு மாணவனாக கேட்டுக்கொண்டேன். அந்த நேரம் அவர் சொன்ன தகவல்களை மறந்துவிடுவேனோ என பயந்தேன் என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். 


 

 

Share this story