‘அந்தகன்’ நிறைவு... சூப்பர் அப்டேட் கொடுத்த சிம்ரன் !

simran

பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘அந்தகன்’ படத்தின் சூப்பர் அப்டேட்டை நடிகை சிம்ரன் கொடுத்துள்ளார்.  

முன்னணி இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அந்தகன்’. இந்த படத்தில் சாக்லெட் பாய் பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

simran

இந்த படம் இந்தியில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘அந்தாதூண்’ படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.  தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கைப்பற்றியுள்ள கலைப்புலி எஸ் தாணு விரைவில் வெளியிடவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 

simran

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை நடிகை சிம்ரன் கொடுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அந்தகன் படம் நிறைவுபெற்றுள்ளது. இந்த படம் உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். விரைவில் வெளியாகும் இந்த படத்திற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

 


 

Share this story