உங்கள் படுக்கையறையில் இதுபோன்று நடந்தால் சும்மா இருப்பீர்களா - அனுஷ்கா சர்மா காட்டம்

anushka sharma

தனது அறைக்குள் அனுமதியின்று நுழைந்த மர்ம நபர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக விராட் கோலி கூறியிருந்த நிலையில், அந்த சம்பவத்திற்கு அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.  நேற்று நடைபெற்ற தென் ஆப்ரிக்க அணிகு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டி முடிவடைந்ததும் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பதிவில் தனது அறைக்குள் அனுமதியின்று நுழைந்த மர்ம நபர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து விராட் கோலி அந்த பதிவில் கூறியுள்ளதாவது: ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இந்த இந்த வீடியோ திகைக்க வைக்கிறது, இது எனது தனியுரிமையைப் பற்றி என்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. எனது சொந்த ஹோட்டல் அறையில் என்னால் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், நான் உண்மையில் எந்த தனிப்பட்ட இடத்தையும் எங்கு எதிர்பார்க்க முடியும்? இந்த வகையானது எனக்கு சரியில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமையை மதிக்கவும், அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

anushka sharma post

விராட் கோலி பதிவிட்ட அந்த வீடியோவை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "கடந்த காலத்தில் சில ரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். அது மிகவும் மோசமான விஷயம். சில சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நலம். இதே போல் உங்கள் படுக்கையறையில் நடந்தால் சும்மா இருப்பீர்களா" என குறிப்பிட்டுள்ளார்

Share this story