விருது இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஆரவ்.. படமாகிறது உண்மைக்கதை !

arav

 பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் புதிய படம் குறித்து சுவாரஸ்சிய தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆரவ். இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ‘ராஜபீமா’ படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கடந்த ஆண்டு வெளியான உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். 

arav

இந்த படத்திற்கு நடிகர் ஆரவ் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஆரவ்விற்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தை பல விருதுகளை குவித்த ‘தேன்’ படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகம் இயக்குகிறார். 

இந்த படத்தில் 12 சிறுமிக்கு தந்தையாக ஆரவ் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக ரம்யாபாண்டியன் நடிக்கிறார். இவர்களாக மகளாக பேபி க்ரித்திகா நடிக்கிறார். 1996-ல் வாழ்ந்த மலைவாழ் மக்களுக்கும், நிலத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாகிறது. 

தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் எமோஷனலாக காட்சிகள் இந்த படத்தில் அதிக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story