ஸ்பை த்ரில்லரில் உருவாகியுள்ள அருண் விஜய்யின் ‘பார்டர்’... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்டர்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்‘பார்டர்’. 'குற்றம் 23' படத்துக்கு பிறகு அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை ரெஜினா கசன்ட்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நீண்ட நாட்களாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் இன்றுவரை வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அருண் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.