படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்.. கேக் வெட்டி மகிழ்ச்சி !

arun vijay

‘அச்சம் என்பது இல்லையே’ படக்குழுவினரோடு நடிகர் அருண் விஜய் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

arun vijay

அருண் விஜய் மற்றும் ஏ.எல் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக அருண் விஜய் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

arun vijay

மேலும் இந்த படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. 

arun vijay

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ‘அச்சம் என்பது இல்லையே’ படக்குழுவினரோடு இணைந்து தனது பிறந்தநாளை நடிகர் அருண் விஜய் கொண்டாடினார். அப்போது கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

 

Share this story